இஸ்லாம்

சான்று பகரும் சில கிறிஸ்தவ நம்பிக்கைகள்

கடவுள் பற்றி:                                                                                      English
   "கடவுள் ஒருவரே. அவருக்கு உருவம் இல்லை. அவருக்கு நிகராக எதுவுமில்லை. அவரே தொடக்கமும் முடிவுமாக இருக்கிறார்" -கிறிஸ்தவம்.
   "கடவுள் ஒருவனே. அவனுக்கு உருவம் இல்லை. அவனுக்கு நிகரானது எதுவும் ல்லை. அவனை யாரும் தோற்றுவிக்கவில்லை" -இஸ்லாம்.

படைப்பு பற்றி:
   'விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உரு வாக்கப் பெற்று நிறைவெய்தின. கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்' -தொடக்க நூல் 2:1,2.
   'இறைவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் [அரியணை] மீது அமர்ந்தான்' -குரான் 57:4.

ஆபிரகாம் பற்றி:
   'கடவுள் ஆபிரகாமிடம் கூறியது: "எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதை க்குகிறேன்" -தொடக்க நூல் 17:5.
   'ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை அழைத்து, "ஆண்டவர் கூறுவது இதுவே! உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் [இயேசு கிறிஸ்து] மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்' -தொடக்க நூல் 22:18.
   'இறைவன் இப்ராகிமிடம் கூறினான்: "நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு தலைவராக ஆக்குகிறேன்" -குரான் 2:124.

கன்னி மரியா பற்றி:
   'வானதூதர் மரியாவைப் பார்த்து கூறியது: "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்" -லூக்கா 1:30-32.
   'வானவர்கள் கூறினர்: "மர்யமே! நிச்சயமாக இறைவன் உம்மைத் தேர்ந்தெடுத்து தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரை யும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். இறைவன் உமக்கு நற்செய்தி கூறுகின்றான்; அதன் பெயர் ஈஸா மஸீஹ் என்பதாகும்" -குரான் 3:42,45.

   "கன்னியான மரியா இயேசு கிறிஸ்துவைப் பெற்றெடுத்தார்" -லூக்கா 1:34.
   "மர்யம் கன்னியாக இருந்தபோதே ஈஸா மஸீஹைப் பெற்றெடுத்தார்" -குரான் 3:47.

இயேசு கிறிஸ்து பற்றி:
   "தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந் தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்" - யோவான் 2:1-2,14.
   "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் இறைவனின் வாக்காக இருக்கின்றார்" -குரான் 4:171.

   'இயேசு மறுமொழியாக, "நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் (திரு முழுக்கு) யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின் றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார்' -மத்தேயு 11:4-6.
   'ஈஸா கூறினார்: "பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்" -குரான் 3:49.

   "தந்தை(யாகிய கடவுள்) மகன் (இயேசு கிறிஸ்து) மேல் அன்பு கூர்ந்து அனைத் தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர்" -யோவான் 3:35-36.
   'இறைவன் கூறினான்: "ஈஸாவே! உம்மைப் பின்பற்றுவோரை, நிராகரிப்பவர்களை விட உயர்த்தியே வைப்பேன்" -குரான் 3:55.

   "கன்னி மரியாவின் மகனாக இயேசு இந்த உலகில் பிறந்தார். அவர் இறையரசு பற்றிய செய்தியை அறிவித்தார். மனித குலத்தை பாவங்களில் இருந்து மீட்பதற்காக அவர் தன் உயிரையே கையளித்தார். கடவுளின் மகன் என்பதற்காக அவர் சிலுவை யில் அறைந்து கொல்லப்பட்டார். இறந்த மூன்றாம் நாளில், அவர் இறந்தோரிடம் இருந்து உயிர் பெற்று ழுந்தார்" -கிறிஸ்தவம்.
   'யூதர்கள் பிலாத்துவைப் பார்த்து, "எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத் தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமை கொண்டாடுகிறான்" என்றனர்' -யோவான் 19:7.
   'குழந்தையாக இருந்த ஈஸா கூறினார்: "நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், மீண்டும் நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத் திருக்கும்" -குரான் 19:33.

   'இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக சீடர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். இறுதியில், அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வை யிலிருந்து மறைத்துவிட்டது' -திருத்தூதர் பணிகள் 1:3,9.
   'திருத்தூதர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்' -மாற்கு 16:19.
   "இறைவன் ஈஸாவைத் தன் பக்கம் உயர்த்திக் கொண்டான்" -குரான் 4:158. 

தீர்ப்பு நாள் பற்றி: 
   "பின்பு வானத்தில் மானிட மகன் (இயேசு கிறிஸ்து) வருகையின் அறிகுறி தோன் றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவ ரும் மாரடித்துப் புலம்புவர். அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்" -மத்தேயு 24:30-31.
   "அந்நாளில் வானத்தைப் பிளந்துகொண்டு ஒரு மேகம் வெளிப்படும். மேலும் வானவர்கள் கூட்டங்கூட்டமாய் இறக்கி வைக்கப்படுவார்கள்" -குரான் 25:25.
   "அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அனைவரும் அடங்கி ஒடுங்கியவர்களாக இறைவன் திருமுன் வருவார்கள்" -குரான் 27:87.

சில முரண்பாடுகள்:
   "இறைவன் ஒருவரை மகனாக ஏற்படுத்தியுள்ளான் என்று கிறிஸ்தவர்கள் கூறுகின் றார்கள். ஒருவரை மகனாக ஏற்படுத்திக் கொள்வது இறைவனுக்கு ஏற்றது அல்ல" -குரான் 19:88,92.
   "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்" -யோவான் 3:16-17.

   "உண்மையில் யூதர்கள் ஈஸாவைக் கொலை செய்யவுமில்லை; அவரைச் சிலுவை யில் அறையவுமில்லை! மாறாக, இறைவன் அவரைத் தன் பக்கம் உயர்த்திக் கொண் டான்" -குரான் 4:157,158.
   "முற்காலத்தில் மக்களிடையே போலி இறைவாக்கினர் தோன்றினர். அவ்வாறே உங்களிடையேயும் போலிப் போதகர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அழிவை விளை விக்கும் கொள்கைகளைப் புகுத்திவிடுவார்கள்; (தனது சிலுவை மரணத்தின் வழி யாக) தங்களை விலைகொடுத்து மீட்ட (இயேசு) ஆண்டவரையும் மறுதலிப்பார் கள்" -2 பேதுரு 2:1.
   "சிலர் உங்கள் மனத்தைக் குழப்பி கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை. நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி யினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக!" -கலாத்தியர் 1:7-8.

இறுதியாக...                                                              இஸ்லாம் ஒரு தவறான மார்க்கம்
   "இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!" -திருவெளிப்பாடு 1:7.