Sunday, January 29, 2012

ஜனவரி 29, 2012

கடவுளின் அதிகாரம் அன்பிலும் தாழ்ச்சியிலும்
சேவையிலும் வெளிப்படுகிறது - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்க வந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புனித பூமியின் அமைதிக்கான உலக பரிந்துரை நாளை முன்னிட்டு 2 புறாக்களைப் பறக்கவிட்டு, கடவுளின் அன்பு நிறைந்த அதிகாரத்தைப் பற்றிப் பின்வரும் கருத்துகளை எடுத்துரைத்தார்.
   இன்றைய நற்செய்தி வாசகம், ஒய்வு நாளில் இயேசு கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில் கற்பித் ததைப் பற்றி பேசுகிறது. அவரது போதனையின் நடுவே, இயேசுவை "கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' அதாவது 'மெசியா' என்று அடையாளப்படுத்திய தீய ஆவி பிடித்திருந்த மனிதருக்கு விடுதலை அளித்தது மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. உடனேயே அவரது புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. அங்கு அவர் இறையரசை அறிவித்து எல்லா விதமான நோயுற்றோரையும் குணமாக்கினார்.
   இயேசு மனிதரிடம் பேசுகின்ற வார்த்தை, தந்தையின் திருவுளத்துக்கும் மேலும் தங்களைப் பற்றிய உண்மைக்கும் உடனடியாக வழி திறக்கின்றது. வார்த்தையின் விளைவாக, இயேசு தீமையில் இருந்து விடுதலை அளிக்கும் அடையாளங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்தார். புனித அத்தனாசியுஸ் கூறுவது போன்று, "தீய ஆவிகளுக்கு கட்டளையிட்டு விரட்டுவது மனிதரின் செயலல்ல, அது கடவுளின் செயல். உண்மையில், ஆண்டவர் மனிதரை நோய்களில் இருந்தும் தளர்ச்சியில் இருந்தும் விலக்குகிறார்." இறை அதிகாரம் என்பது இயற்கையின் ஆற்றல் அல்ல. அது இந்த பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளின் அன்பின் ஆற்றல். மேலும் அவரது ஒரே பேறான மகனில் மனுவுரு ஏற்று, நமது மனித குலத்திற்கு இறங்கி வந்து பாவக் கறைபடிந்த உலகை குணப்படுத்துகிறார்.
   மனிதரின் அதிகாரம் என்பது உரிமை, பதவி, அடக்கி ஆள்தல், வெற்றி என்னும் விதத்தில் அர்த்தம் கொள்ளப்படுகிறது. எப்படியானாலும், கடவுளைப் பொறுத்த வரை அதிகாரம் என்பதன் பொருள் சேவை, தாழ்ச்சி, அன்பு; அதாவது குனிந்து தனது சீடர்களின் பாதங்களைக் கழுவிய இயேசுவின் வழிமுறையில் நுழைந்தால், அவர் மனிதரின் உண்மையான நன்மையையே விரும்பினார், காயங்களை குணப் படுத்தினார், அன்புக்காக தன் உயிரையே கையளித்தார், ஏனெனில் அவர் அன்பாக இருக்கிறார். சியன்னா புனித கத்தரீன் தனது கடிதங்களுள் ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "கடவுள் தலைசிறந்த முடிவற்ற அன்பாக இருக்கிறார், மேலும் நமது நன்மையைத் தவிர வேறெதனையும் அவர் விரும்பவில்லை என்பதை, உண்மையில், விசுவாசத்தின் ஒளியால் நாம் கண்டு அறிந்துகொள்ள வேண்டும்."
   அன்பு நண்பர்களே, வியாழக்கிழமை பிப்ரவரி 2ந்தேதி, நம் ஆண்டவரைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகிறோம்; அது அர்ப்பண வாழ்வுக்கான உலக நாளாகும். நம்பிக்கையோடு நாம் தூய்மைமிகு மரியாவை வேண்டுவோம்; அவர் மனித குலத்தை விடுவித்து குணமாக்கும் இறை இரக்கத்தால் நமது இதயங்கள் ஈர்க்கப்படுமாறு வழிநடத்துவதோடு, அன்பின் ஆற்றலால் அவற்றை அனைத்து அருளாலும் தயவாலும் நிரப்புவார். வாழ்வின் தடுமாற்றங்களிலும் தீமையின் வெளிப்படையான வளர்ச்சியிலும், வழியும் உண் மையும் உயிருமான ஆண்டவர் இயேசுவில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருக்க நாம் செபிப்போம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!

Thursday, January 26, 2012

ஜனவரி 25, 2012

கிறிஸ்தவ ஒன்றிப்பை அடைவதற்கான நமது
உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம் - திருத்தந்தை

   45வது கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தை நிறைவுசெய்த மாலை திருவழிபாட்டில் இப்புதன் மறையுரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே நிலவும் பிரி வினைகளின் வேதனையை இந்நாட்களில் அனுப விக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம், எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குவோம் எனவும், கடவு ளின் விருப்பமான கிறிஸ்தவ ஒன்றிப்பைத் துணி வோடும் தாராள உள்ளத்தோடும் அடைவதற்கு, நமது உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம் என்றும் கூறினார்.
   கிறிஸ்துவின் வெற்றி என்பது, கிறிஸ்துவோடும் பிறரோடும் நாம் வாழ்வின் நிறைவைப் பகிர்ந்து கொள்வதைத் தடுக்கும் அனைத்தையும் மேற்கொள்வதாகும் என்று கூறிய திருத்தந்தை, "நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெற்றியால் நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம்” (1கொரி.15.51-58) என்ற இச்செபவாரத்தின் கருப்பொருள் பற்றியும் பேசினார்.
   ஆதித்திருச்சபையைத் துன்புறுத்திய சவுல், இயேசுவின் நற்செய்தியின் அயராத திருத்தூதரான இந்தப் புதிரான மாற்றம், நீண்ட காலம் சிந்தித்ததன் பயனாகவோ, சொந்த முயற்சியின் பயனாகவோ இடம் பெறவில்லை, மாறாக, தமது மறை பொருளான வழிகளில் செயல்படும் கடவுளின் திருவருளால் நிகழ்ந்தது என்றும், நாமும், நமது செபத்தால் கிறிஸ்துவின் சாயலாக மாற முடியும், இது சிறப்பாக, கிறிஸ்தவ ஒன்றிப்பில் உண்மையாகின்றது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
   உரோம் புனித பவுல் பசிலிக்காவில் இடம் பெற்ற இம்மாலைத் திருவழிபாட்டில், கான்டர்பரி பேராயரின் உரோம் பிரதிநிதி, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தலை வர் ரிச்சர்டுசன், போலந்து கிறிஸ்தவ சபைக் குழுக்கள், இன்னும் பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Wednesday, January 25, 2012

ஜனவரி 25, 2012

கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் அனைவரின்
ஒன்றிப்புக்காக செபிப்போம் - திருத்தந்தை

   இத்தாலியின் உரோம் நகரில் வழக்கமான குளிர் இல்லையெனினும் வாடைக்காற்று வீசி, குளிரின் தாக்கத்தை தந்து கொண்டு இருப்பதன் காரணமாக, திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்திலேயே திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ செபம் குறித்த தன் சிந் தனைகளை இன்றைய புதன் மறைபோதகத்தில் தொடர்ந்தார்.
   இறுதி இரவு உணவின் போது இயேசு வழங்கிய குருத்துவச் செபம் குறித்து இன்று நோக்குவோம். யோம் கிப்பூர் எனும் யூதர்களின் பரிகாரத் திருவிழாவின் பின்னணியில், குருவும் பலிப்பொருளுமான இயேசு, தான் ஒப்புரவுப் பலியாகும் வேளையில் தந்தை தன்னை மகிமைப்படுத்துவாராக எனச் செபிக்கிறார். தன் சீடர்களைத் தனியாக எடுத்து அவர்களை இவ்வுலகில் தன் பணியைத் தொடர்ந்து நடத்த அனுப்பும் வண்ணம், அவர்களைத் திருநிலைப்படுத்த தந்தையிடம் வேண்டுகிறார் இயேசு.
   திருத்தூதர்களின் போதனை வழி தன் மேல் விசுவாசம் கொள்ளும் அனைவ ருக்கும் ஒன்றிப்பு எனும் கொடை வழங்கப்பட வேண்டும் எனவும் விண்ணப் பிக்கிறார் இயேசு. ஆகவே, அவரின் குருத்துவ செபமானது, திருச்சபையையும், சீடர் சமூகத்தையும் நிறுவிய ஒன்றாக நோக்கப்படலாம். இந்தச் சீடர் சமூகம், இயேசுவில் கொள்ளும் விசுவாசத்தின் வழி ஒரே குடும்பமாக மாற்றப்பட்டு அவரின் மீட்புப் பணியில் பங்கு பெறுகிறது. 
   ஆண்டவராம் இயேசுவின் குருத்துவச் செபத்தை தியானிக்கும் வேளையில், நாம் நம் திருமுழுக்குத் திருநிலைப்பாட்டில் வளரவும், இந்த உலகிற்கும் நம் அயலா ருக்குமான தேவைகளுக்கென நம் செபங்களைத் திறக்கவும் உதவும் அருளைத் தந்தையாம் இறைவனிடம் வேண்டுவோம். கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் நாம் செய்தது போல், கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் அனைவரிடையேயான கண்ணால் காணக்கூடிய ஒன்றிப்பு எனும் கொடைக்காகச் செபிப்போம். இந்த ஒன்றிப்பைக் காணும் இவ்வுலகம் மானிடமகனிலும் அவரை அனுப்பிய தந்தையிலும் விசுவாசம் கொள்ளும்.
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, January 23, 2012

ஜனவரி 22, 2012

கிறிஸ்துவில் ஒன்றாக நாம் ஆழமான 
உறுதி ஏற்போம் - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான ஆவலுக்கும் உண்மை சுதந்திரத்திற்கான ஆசைக்கும் இடையே உள்ள ஆழ்ந்த ஆன்மீக தொடர்பை எடுத்துரைத்தார்.
   இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், மற்றும் உயிர்ப்பில் வேரூன்றிய தனிமனித மனமாற்றம் மூலம் மட்டுமே, கிறிஸ்தவ ஒன்றிப்பை அடைய முடியும். இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பாகிய, பாவம் மற்றும் மரணத்தின் மீது அவர் அடைந்த வெற்றியைத் தியானிப்பதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம், இந்த யிர்ப்பு நிகழ்வானது, அவரில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களை உருமாற்றுவ துடன் முடிவில்லாத வாழ்வையும் அவர்களுக்குத் திறந்து விடுகின்றது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார். 
   போலந்து நாட்டில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஆர்த்தோடாக்ஸ் மற்றும் புராட்டஸ்டான்ட் சபைகளை உள்ளடக்கிய குழுவினரால் இந்த 2012ம் ஆண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்திற்காக (ஜனவரி 18-25) உருவாக்கப்பட்ட, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெற்றியால் நாம் அனைவரும் மாற்றுரு பெறு வோம்' என்ற மையக்கருத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை, "வரலாற்று நடப்பில் போலந்து பல்வேறு விதமான துன்பங்களுக்கு எதிராக தைரியமாக போராடிதுடன், விசுவாசத்தால் உருவாக்கப்பட்ட சிறந்த உறுதிக்கு மீண்டும் மீண்டும் சான்றாகவும் திகழ்கிறது" என்று கூறினார்.
   மேலும் அவர், "பல நூற்றாண்டுகளின் படிப்பினைகள் மூலம் போலந்து கிறிஸ்த வர்கள், அவர்களின் சுதந்திரத்திற்கான ஆசையில் ஒரு ஆன்மீக பரிமாணத்தை இயற்கையான உள்ளுணர்வாக கொண்டுள்ளனர். மேலும், ஆழ்ந்த உள்மன மாற்றத் தோடு இணைந்திருந்தால் மட்டுமே உண்மையான வெற்றியை அடைய முடியும் என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்" என்றும் எடுத்துரைத்தார்.
   கடவுள் நம்மில் செயல்பட அனுமதித்தால், கிறிஸ்துவின் சாயலில் மாற்றுரு பெற நம்மை அர்ப்பணித்தால், உண்மையான வெற்றியாகிய கிறிஸ்துவின் புது வாழ்வில் நாம் நுழைந்தால் கிறிஸ்தவ ஒன்றிப்பு மிக எளிதில் டைக்கூடியதே என்றும், அனைத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் விளங்கும் காணக்கூடிய ஒன்றிப்பு, எப்போதும் கடவுளிடமிருந்து வரும் செயலாகும்; நமது பலவீனத்தை ஏற்று இதை ஒரு கொடையாக ஏற்பதற்கு தாழ்மைப்பண்பைக் கடவுளிடம் கேட்போம் எனவும் கூறிய திருத்தந்தை, ஒவ்வொரு கொடையும் ஓர் அர்ப்பணமாக மாறுகின்றது என்றும், நமது அன்றாட அர்ப்பணம், நாம் ஒருவர் ஒருவருக்குப் பிறரன்புப் பணி செய்வதாகும் எனவும் கூறினார்.
   திருத்தந்தை ஆங்கிலத்தில் ஆற்றிய உரை பின்வருமாறு: இந்த வாரம் உல கெங்கும் உள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தை சிறப்பிக்கிறோம். தூய பவுல் கூறுவது போன்று, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வின் வெற்றி வழியாக நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம். கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் அனைவரின் ஒன்றிப்புக்காக நம் செபங்களை புதுப்பிப்பதோடு, அவரில் ஒன்றாக நாம் ஆழமா உறுதி ஏற்போம். உங்கள் ஒவ்வொருவர் மீதும், வீட்டிலுள்ள உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் அமைதிக்கும் மகிழ்ச்சிக்குமான கடவுளின் ஆசிகள் பொழியப்பட செபிக்கிறேன்.
   இத்திங்களன்று சந்திர புத்தாண்டை சிறப்பிக்கும் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறிய திருத்தந்தை, "பொருளாதார, சமூக நெருக்கடிகள் நிறைந்த இன்றைய உலகில், புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் கொண்டதாகவும், துன்புறுவோருக்கு விடுதலை அளிப்பதாகவும் குறிப்பாக இளையோருக்கு அவர்களது ஆர்வம் மற்றும் இலட்சிய பயணத்தில் நம்பிக்கை வழங்குவதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

Friday, January 20, 2012

ஜனவரி 20, 2012

நற்செய்தி அறிவிப்பில் இளம் அருட்பணியாளரிடமிருந்து திருச்சபை அதிகம் எதிர்பார்க்கிறது - திருத்தந்தை

   கர்தினால் தொமினிக்கோ காப்ரானிக்காவால் 555 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ரோம் காப்ரனிக்கா குருத்துவப் பயிற்சி நிறுவனத்தின் சுமார் எழுபது உறுப்பினர்களை இந்த வெள்ளிக் கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வரும் கருத்துக் களை எடுத்துரைத்தார்:
    எந்தவிதப் பாரபட்சமுமின்றி, சகோதரத்துவத் திற்கும் திருச்சபையின் உணர்வுக்கும் திறந்த மனம் கொண்டதாய், தூய வாழ்வில் வளர்வதற்கு மிகுந்த ஆவல் கொண்டதாய் ஓர் அருட்பணியாளரின் வாழ்வு அமைய வேண்டும்.
   விசுவாசத்திற்கு வீரமுடன் சாட்சியம் பகரும் ஒரு மனிதர், கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவில், கிறிஸ்துவோடு வாழும் ஒருவராக இருக்க வேண்டும் என்பதை,
இப் பயிற்சி நிறுவனத்தின் பாதுகாவலியும் கன்னி மறைசாட்சியுமான புனித ஆக்னசின் வாழ்வு உணர்த்துகின்றது.
   குருத்துவ வாழ்வுக்கானப் பயிற்சியும், எல்லா நிலைகளிலும் ஒருங்கிணைந் ததாய், இறைவனோடும், தன்னோடும் தான் வாழும் குழுவோடும் ஓர் உறுதியான ஆன்மீக வாழ்வால் வழிநடத்தப்பட்டதாய் இருக்க வேண்டும். நற்செய்தி மற்றும் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் திருச்சபை, இளம் அருட்பணியாளரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது.
   இந்நிறுவனத்தில் வாழ்வோர், தங்களது அன்றாட வாழ்வில் கிறிஸ்துவோடு ஆழமாக ஒன்றித்திருப்பதன் மூலம், உண்மை மற்றும் மகிழ்வோடு குழுவில் வாழ முடியும்; அவற்றின் மூலம் இக்குருத்துவப் பயிற்சி நிறுவனத்தின் மரபுகளைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.

Wednesday, January 18, 2012

ஜனவரி 18, 2012

நற்செயதிக்கான ஒன்றிணைந்த சாட்சிகளாக விளங்க
நாம் ஆண்டவரை மன்றாடுவோம் - திருத்தந்தை

   ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18 முதல் 25 வரை திருச்சபையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன் றிப்புக்கான செப வாரம் குறித்து, இப்புதன் பொது மறைபோதகத்தில் தன் கருத்துக்களை வழங்கி னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   இப்புதனன்று துவங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம், ஒன்றிப்பு எனும் கொடைக்காக செபிக் குமாறு கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. 'நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்து வின் வெற்றியால் நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம்' என்ற இவ்வாண்டின் செப வாரத்திற்கான தலைப்பு, கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் போலந்து கிறிஸ் தவ சபைகளின் அவை பிரதிநிதிகளால் தேர்வுச் செய்யப்பட்டது. அடக்குமுறை மற்றும் சித்ரவதை குறித்த போலந்தின் அனுபவம், பாவம் மற்றும் மரணத்தின் மீது இயேசு கண்ட வெற்றி குறித்து ஆழமாகத் தியானிக்கத் தூண்டுகிறது. இயேசு கண்ட இந்த வெற்றியை நாம் விசுவாசத்தின் வழியாக பகிர்கிறோம். தன் போதனை, எடுத்துக்காட்டு மற்றும் பாஸ்கா மறையுண்மை வழி வெற்றிக்கானப் பாதையைக் காட்டினார் நமதாண்டவர். 
   இந்த வெற்றியானது, உலக வலிமையால் அல்ல, மாறாக, அன்பாலும் ஏழைகள் மீதான அக்கறையாலும் பெறப்பட்டது. கிறிஸ்துவில் நாம் கொள்ளும் விசுவாச மும், உள்மன மாற்றமும், தனிமனித நிலையிலும் சமூக அளவிலும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செபத்தோடு எப்போதும் இணைந்து செல்வதாக இருக்க வேண்டும். அனைத்து கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், நம் மனங்கள் மாற்றம் பெற்று நற்செய்திக்கான ஒன்றிணைந்த சாட்சிகளாக விளங்கவும் உதவு மாறு நம் ஆண்டவராம் இயேசுவை நோக்கி இச்செப வாரத்தில் சிறப்பான விதத்தில் செபிப்போம். இதன்வழி நாம், புதிய நற்செய்தி அறிவித்தலுக்கு நம் பங்கை ஆற்று வதோடு, இன்றைய காலத்தின் அனைத்து மக்களின் ஆன்மீகப் பசிக்கு முழுமை யான விதத்தில் பதிலளிப்போம்.
   இவ்வாறு, தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனை வருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, January 16, 2012

ஜனவரி 15, 2012

கடவுளின் அழைப்புக்கு இளையோர் பதிலளிக்க ஆன்மீக
வழிகாட்டிகள் உதவ வேண்டும் - திருத்தந்தை

   இறை அழைத்தலைக் குறித்து உரைக்கும் இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களை மேற்கோள் காட்டி தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், முதல் வாசகத்தில் இடம்பெற்ற சாமுவேலின் அழைப்பை யும், நற்செய்தியில் காணும் இயேசுவின் முதல் சீடர்களின் அழைப்பையும் பற்றி எடுத்துரைத்தார்.
   இந்த இரண்டு நிகழ்வுகளிலும், அழைக்கப்பட்ட வர்கள் கடவுளின் குரலை அடையாளம் கண்டு பின்பற்ற உதவும் இடைநிலையாரின் பங்கை வலியுறுத்துகின்றன; கடவுளுக்கும் அவரது மக்களுக்கும் பணியாற்றுவதற்கான விசுவாசப் பயணத்தின் அழைப்பில் பதிலளிக்க, ஆன்மீக வழிகாட்டிகள் இத்தகைய மனநிலையோடு உதவ வேண்டும் என திருத்தந்தை வலியுறுத்தினார்.
   இறைபணி செய்வதற்கான அழைப்பில், பெற்றோரின் அடிப்படைப் பங்கை மறக்க முடியாது; பெற்றோரது மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் உரிய விசுவாசமும், இல் லற அன்பும் அவர்களது குழந்தைகளின் வாழ்வை அழகிய விதத்தில் இறையன்பில் கட்டி எழுப்புகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
   அனைத்து நிலையில் கற்பிப்போரும், குறிப்பாக குருக்களும் பெற்றோரும், இளையோரின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் மட்டுமின்றி, இறைவனின் அழைப் பிற்கு பதிலுரைக்க உதவும் ஆன்மீகப் பங்காற்றுவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்று திருத்தந்தை செபித்தார்.
   மூவேளை செப உரையை ஆற்றி, மக்களாடு இணைந்து செபித்த பின், உலகக் குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினம் குறித்த தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, அமைதியில் வாழும் நோக்கில் புது இடங்களைத் தேடி குடிபெயர்வோர் இவர்கள் என்றார். இந்த மாதம் 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்பட உள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான செப வாரம் குறித்தும் எடுத்து ரைத்த அவர், கிறிஸ்தவ சபைகளிடையே முழு ஒன்றிப்பு ஏற்பட அனைவரும் செபிக்குமாறும் விண்ணப்பித்தார்.

Wednesday, January 11, 2012

ஜனவரி 11, 2012

நற்கருணை இயேசு மற்றும் அவரது திருச்சபையின்
மேலான செபமாக இருக்கிறது - திருத்தந்தை

   இப்புதனன்று திருத்தந்தை ஆறாம் பவுல் மண்ட பத்தில் திருப்பயணிகளை சந்தித்து, புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ செபம் குறித்த தன் தொடர் மறையுரையில் இயேசுவின் இறுதி இரவுணவு செபம் பற்றிய கருத்துக்களை வழங்கினார்.
   தன் உடலும், இரத்தமும் அடங்கிய ருட்சாதன மான நற்கருணையை நம் ஆண்டவர் நிறுவியது பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, இயேசு தனது சிலுவைப் பலி மற்றும் மகிமையுள்ள உயிர்த்தெழுதலை எதிர்நோக்கிய பரிசாக தன்னையே இதில் தந்திருக்கிறார் என்று கூறினார்.
   நற்கருணை இயேசு மற்றும் அவரது திருச்சபையின் மேலான செபமாக இருக்கிறது. பாஸ்காத் திருவிழா மற்றும் இஸ்ராயேலின் விடுதலை குறித்த நினைவுகளுக்கு புது அர்த்தம் கொடுத்த இறுதி இரவுணவில் இயேசுவின் செபம் எபிரேயர்களின் ஆசியுரை ஒன்றை எதிரொலிப்பதாக உள்ளது. எபிரேயர்களின் இந்த செபம் நன்றி கூறுவதையும் ஆசீர் எனும் கொடையையும் உள்ளடக்கியது. 
   தான் இறப்பதற்கு முந்தைய அந்த இரவில் இயேசு, அப்பத்தைப் பிட்டு கிண்ணத்தைக் கையளித்த நிகழ்வு, தந்தையின் விருப்பத்திற்குத் தாழ்ச்சியுடன் பணிந்து, மீட்பிற்காகத் தன்னையே முற்றிலுமாகக் கையளித்ததன் அடையாளமாக இருந்தது. இதன்வழி, தொன்மை வழிபாட்டு முறையை முழு நிறைவுக்குக் கொணர்ந்த உண்மையான பாஸ்கா செம்மறியாகக் காட்சியளிக்கிறார் இயேசு. 
   இயேசுவின் செபம் அவரின் சீடர்களிடையே, குறிப்பாக, தூய பேதுருவில் புது வலிமையைத் தூண்டுவதாக உள்ளது. கிறிஸ்துவின் கட்டளைக்குப் பணிந்த வகையிலான நம் திருப்பலிக் கொண்டாட்டம், இறுதி இரவுணவு செபத்தில் நம்மை மேலும் ஆழமான முறையில் இணைப்பதாக. மேலும், இயேசுவுடன் கொள்ளும் ஒன்றிப்பில் நம் வாழ்வை மேலும் முழுமையான விதத்தில் தந்தைக்குப் பலியாக வழங்க நம்மைத் தூண்டுவதாக.
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனை வருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, January 9, 2012

ஜனவரி 9, 2012

அநீதியான, மத அடிப்படையிலான சமூக பாகுபாட்டு முறைகள் அகற்றப்பட வேண்டும் - திருத்தந்தை

   கடந்த ஆண்டில் உலக அளவில் இடம்பெற்ற பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி குறித்தும், இன்றைய உலகில் கல்வி, மத சுதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் கொடுக் கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் திருப் பீடத்திற்கான நாடுகளின் தூதர்களுக்கு இந்தத் திங்களன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரை வழங்கினார்.
   ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் திருப் பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதர்களை திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்துச் சொல்லும் திருத்தந்தை, இந்த
ண்டும் இன்று அவர்களைச் சந்தித்தபோது, கடந்த ஆண்டின் நிதிநெருக்கடியால் பணக்கார நாடுகளும் ஏழை நாடுகளும் பாதிக்கப் பட்டதில் குடும்பங்களோடு இணைந்து இளைஞர்களும் துன்பங்களை அனுபவித் துள்ளனர் மற்றும் வருங்காலம் குறித்த அச்சமும் அவர்களில் உருவாகியுள்ளது என்ற கவலையை வெளியிட்டார். இளைஞர்களின் இத்தகைய அச்ச உணர்வே மத்தியக் கிழக்கு நாடுகள் சிலவற்றிலும் வட ஆப்ரிக்க நாடுகளிலும் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்கான குரலாய் ஓங்கி ஒலித்தது என்பதையும் குறிப்பிட்டார் பாப்பிறை.
   ஓர் உறுதியான, ஒப்புரவு பெற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் பாதையில் அநீதியான பாகுபாட்டுமுறைகள், குறிப்பாக, மத அடிப்படையிலான பாகுபாட்டு முறைகள் அகற்றப்படவேண்டும் என அழைப்பு விடுத்த திருத்தந்தை, தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் குறுகிய கண்ணோட்டத்துடன் கூடிய திட்டங்கள் நீக்கப்படவேண்டும் என்று கூறினார். மத சுதந்திரத்தைப் பற்றி பேசுகையில், கடந்த ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மை சமூக அமைச்சர் ஷபாஸ் பாட்டி கொல்லப் பட்டது குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை, சமூகத்திலிருந்து மதத்தை ஒதுக்கி வைக்கும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறி, அமைதி, நீதி மற்றும் மனித மாண்பை மதிப்பதில்
றிவூட்டும் பள்ளியாக மதம் நோக்கப்பட வேண்டுமே தவிர, சகிப்பற்ற தன்மையின் பொருளாக நோக்கப்படக் கூடாது என்றார்.
   சமூகப்பிரச்சனைகளை அலசுகையில், சிரியாவின் வன்முறைகள், மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்ற தன்மை, புனித பூமியில் இஸ்ரேலுக்கும் பாலஸ் தீனத்திற்கும் இடையேயான பதட்ட நிலைகள், ஈராக்கில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலகள் போன்றவைகளையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
   கடந்த ஆண்டில் உலகில் இடம்பெற்ற இயற்கைப் பேரழிவுகளையும் சுட்டிக் காட்டி, சுற்றுச்சூழலைக் காப்பதில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய கடமை களையும் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஜனவரி 8, 2012

திருமுழுக்கு இறைவனின் குழந்தைகளாக இருப்பதன் மகிழ்ச்சியை உணர்வதற்கான அழைப்பு - திருத்தந்தை

   நம் ஆண்டவரின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திரு முழுக்கு திருவருட்சாதனத்தால் இறைவனின் குழந்தைகளாக இருப்பதன் மகிழ்ச்சியை கிறிஸ் தவர்களுக்கு நினைவுபடுத்தினார்.
   இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, ஒவ் வொரு படைப்புயிரின் இருப்புக்கும், இறைவனே மூலக்காரணமாக இருக்கிறார் என்றும், தந்தையாம் இறைவன் ஒவ்வொரு மனித ரோடும் தனிப்பட்ட விதத்தில் உறவு வைத்துள்ளார் எனவும் எடுத்துரைத்ததோடு, நம்மை ஒன்றிணைப்பதற்கு அடிப்படையான வரையறை, நாம் குழந்தையாக இருப்பது என்றும், நம்மில் எல்லோரும் பெற்றோர் அல்ல, ஆனால் நாம் எல்லாரும் குழந்தைகள் எனவும் கூறினார்.
   இவ்வுலகில் பிறப்பது நமது தேர்வு அல்ல, நாம் பிறப்பதற்கு ஆசைப்படுகிறோமா என்று நம்மிடம் முதலில் கேட்கப்படுவதுமில்லை என தெரிவித்த
அவர், வாழ்க் கையை ஒரு கொடையாக வரவேற்பதற்கு, நாம் வாழும் காலத்தில் வாழ்க்கை பற்றிய ஓர் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது, நமது ஆன்மாவிலும் நம் பெற்றோ ருடனான உறவிலும் பக்குவமடைந்த நிலையைக் குறிக்கிறது என்றும் கூறினார்.
   இவ்வெண்ணமானது, உயிரியல் ரீதியாக அல்ல, மாறாக, ஒழுக்க ரீதியாக பெற்றோராக இருக்கும் திறமையை மக்களில் ஏற்படுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, நாம் ஒவ்வொருவரும் இறைவனால் அன்பு செய்யப்பட்டு அவரின் திட்டத்தின்படி இருக்கிறோம்
எனவும்,
திருச்சபைக்கும் உலகத்திற்கும் மறுபிறப்பின் ஊற்றாக விளங்கும் திருமுழுக்கின் மாபெரும் மறையுண்மைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்றும் குறிப்பிட்டார்.