Friday, January 6, 2012

ஜனவரி 6, 2012

வழிநடத்தும் விண்மீனாகிய கிறிஸ்துவின் ஒளியை
திருச்சபையே உலகுக்கு வழங்குகிறது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு பேராலயத்தில் இந்த வெள்ளிக்கிழமை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்திய திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலி யில், அயர்லாந்துக்கானப் புதிய திருப்பீடத் தூதர் பேரருட்திரு சார்லஸ் ஜான் பிரவுன், ஜார்ஜியா மற்றும் அர்மேனியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேரருட்திரு மரெக் சொல்க்சின்ஸ்கி ஆகிய இருவ ரையும் பேராயர்களாகத் திருநிலைப்படுத்தினார். 
   இத்திருப்பலியில் மறையுரை ஆற்றிய திருத் தந்தை, கடவுளின் இதமான மொழியை கூர்ந்தறியும் இதயத்தைக் கொண்ட மனிதர் களாவும், உண்மையைப் பகுத்து அறியக்கூடியவர்களாகவும் ஆயர்கள் விளங்க வேண்டும் என்றும், கடவுளின் உண்மை வழியில் செல்லக்கூடியவர்களாக அவர்கள் இருக்க வேண்டுமென்றும் கூறினார். கடவுளை அறியும் ஒருவரால் மட்டுமே பிறரை கடவுளிடம் இட்டுச்செல்ல முடியும் என்று கூறிய பாப்பிறை, மனிதருக்காக ஏங்கும் கடவுளைப் பெற்று, பின்னர் மனிதருக்கு அவரையே வழங்குவது ஆயர்க ளுடைய பணியாகும் என்றும் கூறினார்.
   கீழ்த்திசை மூன்று ஞானிகளை வழிகாட்டிய விண்மீன் பற்றி,
விண்மீன்கூட்டம், சூப்பர்நோவா அல்லது வால்நட்சத்திரம் என வல்லுனர்கள் பலவாறு பேசினாலும், நம்மை வழிநடத்தும் மாபெரும் சூப்பர்நோவா விண்மீன் உண்மையில் இயேசு கிறிஸ்துவே என்று திருத்தந்தை கூறினார். புனிதர்கள் கடவுளின் விண்மீன்கள் என்றும் உரைத்த அவர், கடவுளின் ஒளியை உலகுக்குக் காட்டுவதற்கானப் பணியைப் பெற்றுள்ள ஆயர்கள், தங்கள் பணியைத் திறம்படச் செய்வதற்குப் புனிதர்களின் பரிந்துரையை வேண்டுவோம் என்றார்.

   இப்பெருவிழா நாளில் நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, நம் ஆண்டவர் உலகுக்குத் தம்மை வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழாவாகிய இந்நாளில் நாம் பெற்ற விசு வாசத்திற்கு நன்றி செலுத்துவோம். உலகளாவியத் திருச்சபையின் திருப்பணிக்கு, விசுவாசிகள் தங்க ளது சொல்லாலும் செயலாலும் சாட்சிய வாழ்வு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
   இந்த உலகத்தில் த்தனை வளங்கள் இருந்த போதிலும் அது, மனித சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய ஒளியைக் கொடுப்பதற்கு இயலாமல் இருக்கின்றது. ஆயினும், திருச்சபை இறைவார்த்தையின் வழியாக நற்செய்தி ஒளியை ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் கொடுக் கின்றது என்று கூறிய திருத்தந்தை, "ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு சமூக மும் மீட்பராம் கிறிஸ்துவின் ஒளியாலும் அமைதியாலும் நிரப்பப்ட்டும்" எனவும் வாழ்த்தினார்.
   இவ்வுரையின்போது, இந்தியாவின் சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்க திருச்சபை யின் தலைவராகிய எர்ணாகுளம்-அங்கமலி உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் லஞ்சேரி உட்பட 22 புதிய கர்தினால்களின் பெயர்களையும் அறிவித்த திருத் தந்தை, வருகிற பிப்ரவரி 18ம் தேதி புதிய கர்தினால்களின் திருநிலைப்பாடு இடம் பெறும் எனவும் கூறினார். 18 ஆயர்களையும் 4 குருக்களையும் புதிதாக கர்தினால் நிலைக்கு உயர்த்தியுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவர்களுக்காக செபிக்கு மாறும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.