அநீதியான, மத அடிப்படையிலான சமூக பாகுபாட்டு முறைகள் அகற்றப்பட வேண்டும் - திருத்தந்தை
கடந்த ஆண்டில் உலக அளவில் இடம்பெற்ற பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி குறித்தும், இன்றைய உலகில் கல்வி, மத சுதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் கொடுக் கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் திருப் பீடத்திற்கான நாடுகளின் தூதர்களுக்கு இந்தத் திங்களன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரை வழங்கினார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் திருப் பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதர்களை திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்துச் சொல்லும் திருத்தந்தை, இந்த ஆண்டும் இன்று அவர்களைச் சந்தித்தபோது, கடந்த ஆண்டின் நிதிநெருக்கடியால் பணக்கார நாடுகளும் ஏழை நாடுகளும் பாதிக்கப் பட்டதில் குடும்பங்களோடு இணைந்து இளைஞர்களும் துன்பங்களை அனுபவித் துள்ளனர் மற்றும் வருங்காலம் குறித்த அச்சமும் அவர்களில் உருவாகியுள்ளது என்ற கவலையை வெளியிட்டார். இளைஞர்களின் இத்தகைய அச்ச உணர்வே மத்தியக் கிழக்கு நாடுகள் சிலவற்றிலும் வட ஆப்ரிக்க நாடுகளிலும் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்கான குரலாய் ஓங்கி ஒலித்தது என்பதையும் குறிப்பிட்டார் பாப்பிறை.
ஓர் உறுதியான, ஒப்புரவு பெற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் பாதையில் அநீதியான பாகுபாட்டுமுறைகள், குறிப்பாக, மத அடிப்படையிலான பாகுபாட்டு முறைகள் அகற்றப்படவேண்டும் என அழைப்பு விடுத்த திருத்தந்தை, தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் குறுகிய கண்ணோட்டத்துடன் கூடிய திட்டங்கள் நீக்கப்படவேண்டும் என்று கூறினார். மத சுதந்திரத்தைப் பற்றி பேசுகையில், கடந்த ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மை சமூக அமைச்சர் ஷபாஸ் பாட்டி கொல்லப் பட்டது குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை, சமூகத்திலிருந்து மதத்தை ஒதுக்கி வைக்கும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறி, அமைதி, நீதி மற்றும் மனித மாண்பை மதிப்பதில் அறிவூட்டும் பள்ளியாக மதம் நோக்கப்பட வேண்டுமே தவிர, சகிப்பற்ற தன்மையின் பொருளாக நோக்கப்படக் கூடாது என்றார்.
சமூகப்பிரச்சனைகளை அலசுகையில், சிரியாவின் வன்முறைகள், மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்ற தன்மை, புனித பூமியில் இஸ்ரேலுக்கும் பாலஸ் தீனத்திற்கும் இடையேயான பதட்ட நிலைகள், ஈராக்கில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலகள் போன்றவைகளையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
கடந்த ஆண்டில் உலகில் இடம்பெற்ற இயற்கைப் பேரழிவுகளையும் சுட்டிக் காட்டி, சுற்றுச்சூழலைக் காப்பதில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய கடமை களையும் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.