உலகின் ஒளியாக பிறந்துள்ள மீட்பரை
நம் இதயங்களில் வரவேற்போம் - திருத்தந்தை
இந்த கிறிஸ்து பிறப்பு காலத்தில் திருப்பயணி களைச் சந்தித்து புத்தாண்டின் முதல் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இக்காலத்தின் முக்கியத்துவம் குறித்த தன் கருத்துக்களை வழங்கினார்.
இறைமகன் மனுவுடல் எடுத்த மறையுண்மை யையும், உலகின் மீட்பராக தன்னை வெளிப் படுத்தியதையும் திருச்சபை இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் சிறப்பிக்கின்றது. கிறிஸ்துவின் பிறப் பினை குறித்த நம் முதல் பதிலுரை மகிழ்ச்சி என்பதை விவிலியத்தின் சாட்சியத் திலிருந்தும், திருச்சபையின் பாரம்பரியங்களிலிருந்தும் கண்டுகொள்கிறோம். தனது தெய்வீக வாழ்வில் நம்மைப் பங்குதாரர்களாக மாற்றும் வண்ணம் இறைவன் மனித நிலையை ஏற்றுக்கொண்டார் என்பதை உணர்வதிலிருந்து இம்மகிழ்ச்சி பிறக்கிறது.
திருநற்கருணையில் நாம் உள்ளார்ந்த விதமாக அனுபவிக்கும் இந்த வியக்கத்தகு பரிமாற்றம் குறித்து நாம் ஆழமாக தியானிப்பது, நாம் கடவுளின் உரிமைப் பிள்ளைகளாகும் மேன்மைமிகு மாண்பை புரிந்து ஏற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துமஸ் என்பது ஒளியின் திருவிழா என திருவழிபாடு நமக்குக் கற்பிக்கின்றது. ஏனெனில், உலகின் ஒளியாகவும் இறைத்தந்தையுடைய மகிமை யின் சுடரொளியாகவும் இருக்கும் இயேசு, நம்மை இருளிலிருந்து ஒளியின் ஆட்சிக்குள் கொணர்ந்ததுடன், நற்செய்தியின் ஒளியை அனைத்துப் படைப்புகளுக் கும் எடுத்துச் செல்லும்படி நமக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதிதாகப் பிறந்துள்ள மீட்பரை இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நம் இதயங்களுக்குள் வரவேற்போம். இவ்வாறு வரவேற்பதன் வழி அவரிடமிருந்து நாம் பெறும் மகிழ்ச்சி, புத்துணர்வு மற்றும் ஒளி எனும் கொடைகள் நம் வாழ்வை மாற்றியமைப்பதாக.
இவ்வாறு, புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவ ருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்தார். பின்னர் எல்லோருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இவ்வாறு, புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவ ருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்தார். பின்னர் எல்லோருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.