Sunday, May 20, 2012

மே 20, 2012

விண்ணேறிய கிறிஸ்துவில் நம் மனித்தன்மை கடவுளின்
உயரத்துக்கு கொண்டுபோகப்பட்டுள்ளது  - திருத்தந்தை

      இன்று உரோம் தூய பேதுரு பேராலய வளாகத் தில் கூடியிருந்த மக்களுக்கு, பாஸ்கா மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர், சீனத் திருச் சபையோடு இணைந்து செபிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அவரது மறையுரை பின்வருமாறு:
அன்பு சகோதர சகோதரிகளே,
   திருத்தூதர் பணிகள் நூலின்படி, உயிர்த்தெழுந்த நாற்பது நாட்களுக்கு பின் இயேசு விண்ணேற்றம் அடைந்தார், அதாவது தன்னை உலகிற்கு அனுப் பிய தந்தையிடம் திரும்பிச் சென்றார். பல நாடுகளில் இந்த மறைபொருள் வியாழக் கிழமைக்கு பதிலாக அதைத் தொடர்ந்து வரும் ஞாயிறான இன்று கொண்டாடப் படுகிறது. நம் ஆண்டவரின் விண்ணேற்றம், மானிட உடலேற்பில் தொடங்கிய மீட்பின் நிறைவைக் குறிக்கிறது. கடைசி முறையாக தன் சீடர்களுக்கு கற்பித்த பின்பு, இயேசு விண்ணகம் சென்றார். எப்படியிருந்தாலும், அவர், "நமது நிலை யிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ளவில்லை," உண்மையில், அவரது மனிதத் தன்மையில், அவர் மனித குலத்தைத் தன்னோடு தந்தையின் நெருக்கத்திற்கு கொண்டு சென்று, நமது மண்ணகப் பயணத்தின் இறுதி முடிவை வெளிப்படுத்தி யுள்ளார். அவர் நமக்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்தது போன்று, நமக் காக சிலுவையில் துன்புற்று இறந்தார், நமக்காக அவர் உயிர்த்தெழுந்து கடவுளிடம் சென்றார். எனவே, நம் கடவுளும், நமது தந்தையுமானவரிடம் இருந்து யாரும் தொலைவில் இல்லை.
   விண்ணேற்றம் என்பது பாவத்தின் நுகத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் உச்சக் கட்ட செயலாகும். இதனை திருத்தூதர் பவுல் பின்வருமாறு எழுதுகிறார்: "அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்." புனித பெரிய லியோ குறிப்பிடும்போது, இந்த மறைபொருளில் "ஆன்மாவின் அழி வின்மை மட்டுமின்றி, உடலின் அழியாமையும் அறிவிக்கப்படுகிறது" என்கிறார். நிலத்தில் இருந்து ஆண்டவர் விண்ணகம் நோக்கி சென்றதை சீடர்கள் பார்த்தபோது, இதற்காக அவர்கள் தளர்ந்து போகவில்லை; மாறாக, அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தவர்களாய் மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வெற்றியை அறிவிக்க உந்து தல் பெற்றார்கள். அவர்களது சொந்த அருட்கொடையை ஒவ்வொருவரோடும் பகிந்துகொள்ள உயிர்த்த ஆண்டவர் அவர்களோடு செயலாற்றியதால், கிறிஸ்தவ சமூகம் முழுவதும் விண்ணகத்தின் ஒத்திசைந்த வளத்தை பிரதிபலித்தது. புனித பவுல் இவ்வாறு எழுதுகிறார்: "அவர் மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்... அவரே சிலரைத் திருத்தூதராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற் செய்தியாளர்களாகவும் ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத் தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார்."
   அன்பு நண்பர்களே, கிறிஸ்துவில் நமது மனிதத்தன்மை கடவுளின் உயரத்துக்கு கொண்டுபோகப்பட்டுள்ளது என்பதையே விண்ணேற்றம் நமக்கு கூறுகிறது. எனவே நாம் ஒவ்வொரு முறை செபிக்கும்போதும், மண்ணகம் விண்ணகத்தோடு இணை கின்றது. மேலும் தூபத்தைப் போன்று, அதன் நறுமணப் புகை உன்னதத்தை அடை கிறது. எனவே ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் நமது செபத்தை கிறிஸ்துவில் ஆண்டவருக்கு எழுப்பும்போது, அது வானங்களைத் தாண்டி கடவுளின் அரியணை யினை அடையும்; அது அவரால் கேட்கப்பட்டு பதில் அளிக்கப்படும். சிலுவையின் புனித ஜானின், 'கார்மேல் மலையேற்றம்' என்ற புகழ்பெற்ற நூலில், "நமது இதயத் தின் ஆசைகளை உணர்ந்து பார்க்க, கடவுளுக்கு மிகவும் விருப்பமான நம் செபத்தின் வல்லமையைத் தவிர சிறந்த வழி இல்லை" என்று வாசிக்கிறோம். எனவே, நாம் அவரிடம் கேட்பதை மட்டும் அவர் நமக்கு தருவதில்லை, ஆனால் நமது மீட்புக்கு தேவையானதாகவும், நமக்கு நமையானதாகவும் அவர் பார்ப்பதையே, நாம் கேட்கா விடினும் தருகின்றார்.
    ஆண்டவர் வாக்களித்த விண்ணக காரியங்களைக் குறித்து சிந்திக்கவும், தெய்வீக வாழ்வின் மிகவும் நம்பிக்கைக்குரிய சாட்சிகளாக மாறவும் கன்னி மரியாவின் உதவியை வேண்டுவோம்.