கடவுளின் தொடர்ந்த பிரசன்னம் தேவை என்பதாலே
நற்கருணை நமக்கு வழங்கப்பட்டுள்ளது - திருத்தந்தை

இவ்வியாழன் மாலை உரோம் நகரின் புனித ஜான் லாத்தரன்
பசிலிக்கா பேராலயத்தில் இயேசு வின் திருஉடல், திருஇரத்தத் திருவிழா
திருப்பலி யினை நிகழ்த்திய திருத்தந்தை 16ம்
பெனடிக்ட், தனது மறையுரையில் பின்வரும் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
திருப்பலியின்போது சிறந்ததொரு வழியில் நம் மத்தியில் பிரசன்னமாகும் இறைமகன் இயேசு, தொடர்ந்து ஆலயங்களில் அமைதியாகப் பிரசன்ன மாகி, நம் தனிப்பட்ட வாழ்க்கைக்காகப் பரிந்து பேசுகிறார். நம் தந்தையாகிய கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது புனித மானவற்றை அழிக்க அல்ல, மாறாக புனிதத்தை நிறைவு செய்யவே! சமய நம்பிக்கையற்ற உலகை உருவாக்க விழையும் பல்வேறு சக்திகளால் புனித அடையாளங்கள் உலகிலிருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வருவது குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். ஏனெனில், இத்தகைய உலகில் மனசாட்சியின் குரல் பெரிதும் மௌனமாக்கப்படுகிறது. கடவு ளின் தொடர்ந்த பிரசன்னம் நமக்குத் தேவை என்பதை உணர்ந்து அப்ப, இரச வடிவில் இயேசு தன்னையே நம் மத்தியில் கொடையாக அளித்துச் சென்றுள்ளார்; அவர் தந்த இந்த அற்புதக் கொடைகளுக்கு நன்றி செலுத்தவே நாம் கூடி வந் திருக்கிறோம். திருப்பலியில் நடைபெறும் நற்கருணை கொண்டாட்டத்திற்கும், நற்கருணை ஆராதனைக்கும் இடையே சமநிலை நிலவ வேண்டும். அது, தனிநபர் மற்றும் சமூகங்களின் ஆரோக்கியமான ஆன்மீக வாழ்வுக்கு தேவையானது. அவற்றை எதிர்ப்பது தவறானது. உண்மையில் திவ்விய நற்கருணை மரபு இந்த சமூகம் நற்கருணையை நன்றாகவும் உண்மை யாகவும் கொண்டாட ஒரு ஆன்மீகச் சூழ்நிலையாக உள்ளது. இது தொடர்ந்து, விசுவாசம் மற்றும் வழிபாட்டின் உள் மனநிலையால் உடனிருந்து பின்பற்றப்பட் டால் மட்டுமே, இதன் முழு அர்த்தத்தையும் மதிப்பீட்டையும் வழிபாட்டுச் செயல் வெளிப்படுத்த முடியும்.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இத்திருப்பலிக்குப் பின்னர், லாத்தரன் பசிலிக்காவில் இருந்து புனித மரியன்னை பசிலிக்கா பேராலயத்திற்கு மேற்கொள் ளப்பட்ட நற்கருணைப் பவனியில் கலந்துகொண்ட திருத்தந்தை, பவனியின் இறுதி யில் நற்கருணை ஆசீரையும் வழங்கினார்.