Sunday, August 19, 2012

ஆகஸ்ட் 19, 2012

கிறிஸ்துவின் வார்த்தைகளால் நற்கருணையின் அழகை
மக்கள் மீண்டும் கண்டறிய வேண்டும் - திருத்தந்தை

  திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்ல மான காஸ்தல் கந்தல்போவில் இருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் இடம்பெற்ற இயேசுவின் உரையைப் பற்றிய தனது கருத்தை எடுத்துரைத்தார்.
    முந்திய நாளில் இயேசு, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்தார். அந்த அற்புதத்தின் உண்மையை, அதாவது வாக்குறுதிகள் நிறைவே றும் நேரத்தை அவர் கப்பர்நாகுமில் வெளிப்படுத் துகிறார். இன்றைய திருவழிபாட்டு நற்செய்தியில், விண்ணகத்திலிருந்து இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாக இயேசு தன்னை காண்பிக்கிறார். நற்கருணை பலியில் அவரது உடனிருப்பின் கொடைக்காக நாம் எப்போதும் பசியோடு இருப்போம். அதில் தன்னையே நமக்கு உணவாகவும் பானமாகவும் தரும் இயேசு, விண்ணகத் தந்தையை நோக்கிய பயணத்தில் நம்மைத் தாங்கி நடத்துவார்.
   இயேசு தன்னை வாழ்வு தரும் உணவாக அறிவித்தது, ஒரு இக்கட்டான தருணமாக அவரது பணி வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. இயேசு அப்பத்தின் உருவில் தன்னைக் காண்பித்து, தனது வாழ்வை கையளிக்க அனுப்ப்பப்பட்டிருப்பதை விளக்கு கிறார். மக்களின் புகழை மட்டும் இயேசு தேடுபவராக இருந்திருந்தால், அவர்கள் ஏற் பதற்குக் கடினமான உண்மைகளைச் சொல்லாமல் இருந்திருப்பார், ஆனால், தான் எருசலேமில் படவிருக்கும் துன்பங்களை விளக்கும் கசப்பான உண்மைகளாய் இயே சுவின் வார்த்தைகள் ஒலித்தன. அவரைப் பின்பற்ற விரும்புவோர் அனைவரும், ஆழ்ந்த, தனிப்பட்ட விதத்தில் அவரோடு இணையவும், அவரது அன்பின் பலியில் பங்கேற்கவும் அழைக்கப்படுகிறார்கள்.
   இறுதி இரவுணவு வேளையில், இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதன் நோக்கம் இங்கு புலனாகிறது. கப்பர்நாகுமில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள், அவர் உலக அரசைக் கைப்பற்ற விரும்பும் மெசியா அல்லர் என்பதைப் புரிந்து கொண்டார்கள். இவ்வுலகம் தனக்குத் தர விரும்பிய பதவிகளை விட்டு விலகிய தோடு நிற்காமல், தன் சீடர்களையும் புகழைத் தேடாத ஒரு வாழ்வைத் தேர்ந்து கொள்ளுமாறு இயேசு அழைத்தார். திருப்பலிகளில் பிட்கப்படும் அப்பமாக தன்னை மாறச் செய்யும் சிலுவைப் பலியைப் பற்றிய குறிப்பை இயேசு அளித்தார். திரும்பவும் ஒருமுறை கிறிஸ்துவின் வார்த்தைகளால் வியப்படைந்தவர்களாய், நற்கருணை யின் அழகை மக்கள் மீண்டும் கண்டறிய வேண்டும். நற்கருணை என்ற அருட்சாத னத்தில் தாழ்ச்சியின் சிகரமாய் விளங்கும் இறைமகனை சந்திக்க நாம் தயாராக வேண்டும்.