மரியாவின் விசுவாசம் இறைவனின் வாக்குறுதியில்
முழு நம்பிக்கை கொள்வதாக இருந்தது - திருத்தந்தை

திருவருகைக்காலத்தில் இருக்கும் நமக்கு, இது கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முந்தைய இறுதி புதனான இன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கிய பொது மறை போதகத்தில், அன்னை மரியாவின் விசுவாசம் குறித்த தன் சிந்தனைகளை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பகிர்ந்து கொண்டார்.
நம்பிக்கை ஆண்டின் நம் மறைக்கல்வி போத னையில், இந்த திருவருகைக் காலத்தின் இறுதி நாட்களில், அன்னை மரியாவின் விசுவாசம் குறித்து சிந்திப்பது பொருத்தமுடையதாக இருக் கும். ஆண்டவரின் தூதர் கபிரியேல் கிறிஸ்து பிறப்பு பற்றிய மங்கள வார்த்தையை அறிவித்தபோது, அன்னை மரியாவை நோக்கி "கடவுள் உம்மோடு" எனக்கூறி, அவரின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த மகிழ்வானது, இறைமக்களின் மெசியா குறித்த நம்பிக்கையோடு தொடர்புடையதாகும். சீயோனின் மகளாம் இறைமக்களின் இந்த நம்பிக்கை, தற்போது அன்னை மரியாவில் நிறைவு பெறுகிறது. இறைவார்த்தைக்கு கீழ்ப்படிய அன்னை மரியாவை வடிவமைத்து அவர் இதயத்தை நிறைத்த அருளின் கனியே இது! ஆபிரகாமைப் போல் அன்னை மரியா வின் விசுவாசமும், எதுவும் தெளிவாகத் தெரியாத நிலையிலும் இறைவனின் வாக்குறுதியில் முழு நம்பிக்கை கொள்வதில் இணைந்ததாக இருந்தது.
இறைவனின் திட்டங்கள் சில வேளைகளில் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக, தெளிவற்றதாக, சிலுவை எனும் மறையுண்மையைத் தழுவுவதை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதை நம்மைப் போலவே அன்னை மரியாவும் தன் வாழ்வில் உணர்ந் திருத்தார். மங்கள வார்த்தை அறிவிப்பின்போதும் அன்னை மரியா, வானதூதரின் வார்த்தைகளைத் தன் இதயத்தில் நிறுத்தி தியானித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விசுவாசம் என்பது இறைவிருப்பத்திற்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிதலுடன் இருக்கும் அதேவேளை, அவ்விருப்பத்தை உய்த்துணரவும், புரிந்துகொள்ளவும், ஏற்கவும் தின மும் முயல வேண்டும் என்பதை அன்னைமரியின் எடுத்துக்காட்டு நமக்கு எடுத்து ரைக்கின்றது. இந்த புனித காலத்தில் நம் இதயங்களிலும், நம் இந்த உலகிலும் இறையருளுக்கான கதவுகளைத் திறக்கும் தாழ்ச்சியுடைய, நம்பிக்கைமிகு விசுவா சத்தில் நாம் வளர, இயேசு கற்பித்த செபம் நமக்கு உதவுவதாக!
இவ்வாறு, இவ்வாரப் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.