விசுவாசம் மற்றும் பிறரன்பில் அன்னை மரியா
நம் வழிகாட்டியாக இருக்கிறார் - திருத்தந்தை
இயேசுவின் செபம் குறித்த தன் மறைக்கல்வி சிந்தனைகளை ஒரு தொடராக சில வாரங்கள் வழங்கி, அதனைக் கடந்த புதனன்று நிறைவுச் செய்தத் திருத்தந்தை16ம் பெனடிக்ட், தூய பேதுரு பேராலய வளாகத்தில் இன்று வழங்கிய தனது புதன் மறைபோதகத்தில் செபம் குறித்த ஒரு புதிய தொடரைத் தொடங்கினார்.
கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனைகளின் தொடர்ச்சியாக இன்று, திருத் தூதர் பணி நூல் மற்றும் புனித பவுலின் திருமுகங்களில் செபம் குறித்துக் காணப்படுபவைகள் பற்றிய புதியத் தொடர் ஒன்றைத் துவக்குவோம். இன்று நான் அன்னை மரியா குறித்து உங்களோடுப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். திருத்தூதர் களுடன் எருசலேம் மாடியறையில் தூய ஆவியாரின் கொடைக்காகக் செபத்தோடு காத்திருந்த அன்னை மரியாவை நோக்குவோம்.

கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்பு முதல் இயேசுவின் சிலுவை மற்றும் அதற்குப் பின்னான பெந்தகோஸ்தே வரையிலும், அன்னை மரியாவின் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளிலும், கிறிஸ்துவில் இறைவனின் மீட்புத்திட்ட மறையுண் மையை ஆழ்ந்து தியானித்து செபிக்கும் தாயாகவே அன்னை மரியாவை நமக்கு முன்வைக்கிறார் புனித லூக்கா. எருசலேம் மாடியறையில் நாம் அன்னை மரியின் முக்கிய இடத்தைக் காண்கிறோம். அவரே விசுவாசம் மற்றும் பிறரன்பில் நம் வழிகாட்டியாகவும் முதன்மை எடுத்துக்காட்டாகவும் உள்ளார்.
இறைவனின் தாயாகவும் திருச்சபையின் அன்னையாகவும் இருக்கும் மரியா, மீட்பு வரலாற்றின் ஒவ்வொரு முக்கிய வேளையிலும் திருச்சபைக்குள்ளும் திருச் சபையோடு இணைந்தும் செபிக்கிறார். நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தை யும் அன்னை மரியாவின் கைகளில் ஒப்படைத்து, செபத்தின் தேவை குறித்து நமக்குக் கற்றுத்தர அவரை அனுமதிப்போமாக. இதன்வழி, நாம் அவரின் மகனுடன் அன்பின் ஒன்றிப்பில், தூய ஆவியாரின் அருட்பொழிவுக்கும், உலகின் அனைத்து இறுதி எல்லை வரையிலான நற்செய்தி பரவலுக்கும் வேண்டுவோமாக.
இவ்வாறு, தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இவ்வாறு, தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.