பற்றுறுதி, நம்பிக்கை மற்றும் அன்பின் திருப்பயணியாக
வந்துள்ளேன் – மெக்சிகோவில் திருத்தந்தை
உரோம் நேரப்படி இவ்வெள்ளி காலை 9.30 மணிக்கு பறப்பட்டு, 14 மணி நேரம் விமானப் பயணத்துக்கு பின் மெக்சிகோ நாட்டு நேரப்படி இவ்வெள்ளி மாலை 4.30 மணிக்கு அந்நாட்டை சென்றடைந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இது திருத்தந்தையின் 23வது வெளிநாட்டு திருப்பய ணம் ஆகும். குவனஜுவட்டோ பன்னாட்டு விமான நிலையத்தில் மெக்சிகோ மக்களின் உற்சாகமான வரவேற்பில் மனமகிழ்ந்த திருத்தந்தை, விமானப் படிகளில் இறங்கி வந்தபோதே கைககளை விரித்து அவர்களை வாழ்த்தினார். பின்னர் விமானநிலையத்தில் திருத்தந்தை தனது முதல் உரையை வழங்கினார்.
மெக்சிகோவுக்கு வந்திருப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. மெக்சிகோவும் பெரும் பாலான இலத்தீன் அமெரிக்க நாடுகளும் அண்மை ஆண்டுகளாக தாங்கள் சுதந்திரம் பெற்றதன் 200வது ஆண்டைக் கொண்டாடி வருகின்றன. இத்தருணத்தில் பற்றுறுதி, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் திருப்பயணியாக நான் இங்கு வந்துள்ளேன்.
இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பவர்களை, அதில் உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்த விரும்புகிறேன். மதிப்பும் அமைதியும் கலந்த ஒருங்கிணைந்த நல்வாழ்வுக்கு உத வும் நோக்கத்தில், மெக்சிகோ கத்தோலிக்கர்கள் வேதபோதக மறைப்பணியாளர் களாகச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மனிதரின் ஒப்பிடப்பட முடியாத மற்றும் புறக்கணிக்க எவருக்கும் உரிமையில்லாத மாண்பிலிருந்து இந்த ஒருங்கிணைந்த வாழ்வு பிறக்கின்றது. இந்த மாண்பு, மத சுதந்திரத்திற்குரிய அடிப்படை உரிமையில் குறிப்பாக வெளிப்படுத்தப்பட வேண்டும். நல்லதோர் உல கத்தை உருவாக்குவதற்கு தங்களைச் செயல்ரீதியாக அர்ப்பணிப்பதற்கு, மெக்சிகோ மற்றும் இலத்தீன் அமெ ரிக்க மக்கள் தங்களது நம்பிக்கையை இறைவனில் வைக்க வேண்டுமென, நம்பிக் கையின் திருப்பயணியாக வந்துள்ள நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தேவையில் இருப்போர், குறிப்பாக, அனைத்து வகையான வன்முறை களாலும் பழைய புதிய பகைமைகளாலும் வெறுப்புக்களாலும் துன்புறுவோருக் காக சிறப்பாக செபித்த திருத்தந்தை, விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற மெக்சிகோவில், தானும் அப்பண்பை உணர்வதாகவும், அதேசமயம், இந்நாட்டில் எவரும் வரவேற்க படாமல் இருப்பதாக உணரக்கூடாது என்றும் தெரிவித்தார். இந்த மாபெரும் நாட் டிற்கு செல்ல வேண்டுமென்ற தனது நீண்டகால ஆவலை நிறைவேற்றிய இறைவ னுக்கு நன்றி தெரிவித்த அவர், தங்களது தாயகத்தைவிட்டுத் தொலைவில் வாழ் வோரும், இந்நாடு நல்லிணக்கத்திலும் உண்மையான ஒருங்கிணைந்த வளர்ச்சி யிலும் வளர்வதைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில் ஆர்வம் இழக்கக்கூடாது எனவும் கூறினார். இறுதியாக மெக்சிகோ நாட்டு மக்கள் தாங்கள் பெற்ற விசுவாசத் திற்கு எப்போதும் உண்மையுள்ளவர்களாக வாழ அன்னை மரியாவிடம் செபித்து தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.