குருத்துவ வாழ்வு என்பது கடவுளின்
உடனிருப்பில் வாழ்வதாகும் - திருத்தந்தை
உடனிருப்பில் வாழ்வதாகும் - திருத்தந்தை
இறையழைத்தலுக்கான உலக செப நாளான இன்று தூய பேதுரு பேராலயத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமையில் நிகழ்ந்த திருப்பலி யில், ஒன்பது திருத்தொண்டர்கள் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர். புதிய குருக்களுக்கும் கூடியிருந்த அனைவருக்கும் திருத்தந்தை பின் வருமாறு மறையுரை வழங்கினார்:
குரு என்பவர் ஆயரைப் போன்று தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை உண்மையின் மிகுதி யான வாழ்வுக்கு வழிநடத்த அழைக்கப்பட்டவர். குருத்துவ வாழ்வின் மதிப்பீடு சமூகப் பணிகளோடு மட்டும் தொடர்புகொண்டது அல்ல; அது கடவுளின் ஆழ்ந்த உடனிருப்பில் வாழும் வாழ்வாகும். குருவின் சிலுவை பாரம் வாழ்வில் அதிகரிக் கும்போது, அந்த உடனிருப்பு மிகவும் ஆழமாக இருக்கிறது. இயேசு அவரது மக்கள் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு வாழ்வை அனுபவித்தார். இருந்தாலும் தந்தையாம் கடவுளின் உதவியால், அவர் ஒரு புதிய திருச்சபையை நிறுவினார். குருவும் இயேசுவின் வாழ்க்கை அனுபவத்தை வாழ, போதிக்கும் மற்றும் குணப் படுத்தும் பணிகளுக்காக தன்னை முழுமையாக கையளிக்க அழைக்கப்படுகிறார்.

திருப்பலியைத் தொடர்ந்து பாஸ்கா மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பின்வருமாறு கூறினார்: "இன்றைய நற்செய்தி தனது மந்தைக்காக உயிரையே கொடுக்கும் நல்ல ஆயாராம் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுகிறது. இன்று நாம் குருத் துவ அழைத்தலுக்காகவும் செபிக்கிறோம். இறைவன் மனிதர்களுக்கு எப்போதும் அழைப்பை விடுத்துக்கொண்டே இருக்கிறார், ஆனால் நாம்தான் பல வேளைகளில் அதற்குச் செவிமடுப்பதில்லை. உலகின் மேலோட்டமான பல ஒலிகளால் நம் கவ னம் திரும்பியுள்ளதாலும், இறைவனின் குரலுக்கு செவிகொடுத்தால் நம் சுதந்திரம் பறிபோய்விடும் என்ற தவறான அச்சத்தாலும் நாம் அவர் குரலுக்கு செவிமடுப் பதில்லை. நம் துன்பகரமான வேளைகளில் பலத்தை வழங்கும் இறையன்பு சுவா சிக்கப்படும் முதலிடம் குடும்பமே! கடவுளால் விதைக்கப்பட்ட அனைத்து இறை யழைத்தல் விதைகளும் முளைத்து மிகுந்த பயன் தரவேண்டும் என அனைவரும் செபிப்போம். அதிகமான இளம் ஆண்கள் கிறிஸ்துவின் அழைப்பைக் கேட்டு அவரை நெருக்கமாக பின்பற்றவும், தங்கள் சகோதர சகோதரிகளுக்கு பணியாற்ற தங்கள் வாழ்வைக் கையளிக்கவும் முன்வரட்டும். இன்றைய தினம் திருநிலைப்படுத்தப் பட்ட இளம் குருக்கள் மற்ற இளையோரிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்லர், மாறாக இறைவனின் ஆழ்ந்த அன்பால் தொடப்பட்டவர்கள். கடவுளின் அமைதி உங்கள் அனைவரோடும் இருப்பதாக!"