கத்தோலிக்கரல்லாதவர் நன்மை செய்யும்
பொழுது அகமகிழுங்கள்! - திருத்தந்தை
பொழுது அகமகிழுங்கள்! - திருத்தந்தை
காஸ்தல் கந்தல்போவிலுள்ள திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்ல வளாகத்தில் இஞ் ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக் கான விசுவாசிகளுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு மூவேளை செப உரை வழங்கினார்.
இன்றைய ஞாயிறு நற்செய்தி ஆழ்ந்த பொருள் கொண்டதாக உள்ளது. இயேசுவின் சீடராக இல் லாத ஒருவர், இயேசுவின் பெயரால் பேய்கள் ஓட் டுவதைக் கண்டு, இளமையும் இயேசுவின் மீது தீவிரப்பற்றும் கொண்ட திருத்தூதர் யோவான் அவரைத் தடுக்கப் பார்த்தார், ஆனால் இயேசு அதற்கு அனுமதிக்கவில்லை. ஒரு மறைபோதக ருக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுப்பது போன்ற சிறிய சிறிய செயல்களால் இறையாட்சியோடு மற்றவர்கள் ஒத்துழைக்கும்போது நல்லதும் அற்புதம் நிறைந்த செயல்களும்கூட திருச்சபைக்கு வெளியே நடக்கும் என்று இயேசு தம் திருத்தூதர்களுக்கு விளக்க விரும்பினார். புனித அகுஸ்தீன் இவ்வாறு எழுதுகிறார்: "கத்தோலிக்கத் திருச்சபையில் கத்தோலிக்கம் இல்லாத ஒன்றை ஒருவர் கண்டறிய முடிவது போல, கத்தோலிக்கத் திருச்சபைக்கு வெளியே கத்தோலிக்கமாக இருப்பதை ஒருவரால் கண்டறிய முடியும்." எனவே, திருச்சபைக்கு வெளியே இருக்கும் யாராவது கிறிஸ்துவின் பெயரால் நன்மையானதைச் செய் யும்போது திருச்சபையின் உறுப்பினர்கள் பொறாமை கொள்ளாமல் அகமகிழ வேண் டும், அதே வேளையில் இவ்வாறு நல்லதைச் செய்பவர்கள் சரியான எண்ணத் தோடும் மரியாதையோடும் செய்ய வேண்டும். உடனிருப்பவர்கள் தூய்மையையும் நன்மைத்தனத்தையும் அடையும்போது கத்தோலிக்கர் பொறாமை கொள்ளக்கூடும். எனவே திருச்சபைக்குள்ளே பொறாமைப்படுவதை விட்டுவிட்டு ஒருவர் ஒருவரை எப்பொழுதும் பாராட்டவும் மதிக்கவும் வேண்டும். திருச்சபையிலும் உலகிலும் நம் ஆண்டவர் ஆற்றும் அருஞ்செயல்களுக்காக அவரைப் புகழ்வோம்.