கிறிஸ்துவே நம் அமைதி, நம்பிக்கை,
நம் வாழ்வின் பலம்! - திருத்தந்தை
திருத்தந்தையரின் கோடை இல்லமான காஸ்தல் கந்தல்போவில் விடுமுறையை செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், செப்டம்பர் மாதத்தின் முதல் புதனான இன்று வத்திக்கான் வந்து, திருத் தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் விசுவாசிகளை சந்தித்து, பொது மறைபோதகத்தை வழங்கினார். புதிய ஏற்பாட்டு திருவெளிப்பாடு நூலின் தொடக் கத்தில் காணப்படும் 'செபம்' குறித்த சிந்தனை களை, கூடியிருந்த மக்களோடு திருத்தந்தை பகிர்ந் துகொண்டார்.
திருவெளிப்பாடு நூல் கடினமான ஒன்று எனினும், அது பல வளங்களைத் தன் னுள்ளே
அடக்கியது. இந்நூலின் தொடக்க வரிகளே நிறைய எடுத்துரைக்கின்றன. செபம்
என்றால் என்ன என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடன் பேசும்
இறைவனுக்குச் செவிமடுப்பதே செபம் என்பதையும் அவை நமக்கு எடுத்துரைக் கின்றன.
இன்று, பயனற்ற பல வார்த்தைகளின் மத்தியில் மனிதர்கள் பலர், பிற ருக்கு
செவிமடுக்கும், ஏன், இறைவனுக்கு செவிமடுக்கும் பழக்கத்தையே விட்டொ ழித்து
விட்டனர். செபம் என்பது நம் தேவைகளை நிறைவேற்றுமாறு இறைவனை வேண்டும் வெறும்
வார்த்தைகள் அல்ல, மாறாக, நமக்கு மீட்பையும் நம்பிக்கையை யும் பலத்தையும்
வழங்கிய இயேசு கிறிஸ்துவை நமக்கு கொடையாக வழங்கிய இறைவனுக்கு, அவரின்
அன்புக்கு, நாம் வழங்கும் புகழ்மாலையாக அது தொடங் கப்படவேண்டும். நம்
வாழ்வுக்குள் கிறிஸ்துவை வரவேற்க வேண்டும், மற்றும் நம் கிறிஸ்தவ வாழ்வை
வளப்படுத்தும், ஆழப்படுத்தும் வகையில், கிறிஸ்துவுக்கு 'ஆம்' என்று
சொல்பவர்களாக வாழவேண்டும். நம் வாழ்விலும், வரலாற்றிலும் இறை இருப்பின்
பொருளை, நம் தொடர்ந்த செபம் நமக்கு வெளிப்படுத்தும். சிலுவையில்
அறையப்பட்டு உயிர்த்த இயேசு, நம்மிடையே குடிகொண்டிருப்பது குறித்த
விழிப்பு ணர்வை, மற்றவர்களோடு இணைந்து செபித்தல், குறிப்பாக,
திருவழிபாட்டுச் செபம், மேலும் ஆழப்படுத்தும். இவ்வாறு, எவ்வளவு அதிகமாக
நாம் கிறிஸ்துவை அறிந்து, அன்பு கூர்ந்து, பின்செல்கின்றோமோ, அவ்வளவு
அதிகமாக நாம் அவரைச் செபத்தில் சந்திக்க விரும்புவோம். ஏனெனில், அவரே நம்
அமைதி, நம்பிக்கை மற்றும் நம் வாழ்வின் பலம்!
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, ஹங்கரி நாட்டின்
தலைநகரில் நிறைவுற்ற இளையோர் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு
வரவேற்பையும் வாழ்த்துக்களையும் பின்வருமாறு தெரிவித்தார்: "இளையோரே!
உறவுப் பாலங்களைத் துணிவுடன் கட்டியெழுப்புவதன் மூலம் மனிதகுலம் எனும்
குடும்பத்தின் ஒன்றிப்பை ஊக்குவிக்கும் கிறிஸ்துவின் அழைப்பை இதயத்தில்
ஏற்றுள்ளீர்கள். ஆகவே, நான் உங்களுக்கு ஊக்கமளிக்கிறேன். உங்களுடைய
கத்தோ லிக்க விசுவாசத்தில் உறுதியாய் இருங்கள். இயேசு கிறிஸ்துவை உங்கள்
வாழ்வில் சந்திப்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் எளிமையான மகிழ்வு, உண்மை
அன்பு, ஆழமான அமைதி ஆகியவை உங்கள் சொந்த நாடுகளின் இளையோரிடையே
சுடர் விடும் சாட்சிகளாக உங்களை மாற்றுவதாக!"
இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.