அன்னை மரியின் சந்தேகம் இறைவிருப்பத்தை
புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியே! - திருத்தந்தை
புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியே! - திருத்தந்தை
அன்னை மரிக்கு மங்கள வார்த்தை அறிவிக்கப் பட்டதை மையமாகக் கொண்டுள்ள இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தியானிக்கையில் அன்னை மரியின் கன்னிமை குறித்து கருத்துக் களைப் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன் என தன் ஞாயிறு மூவேளை செப உரையைத் தொடங்கி னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அன்னை மரியா கன்னியாக இருந்துகொண்டே இயேசுவைக் கருத் தாங்கினார் என்ற திருத்தந்தை, 'கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர்' என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தை களையும் மேற்கோள் காட்டினார்.
இந்த பழமையான இறைவாக்கு அன்னை மரியிடம் இயேசு உடலெடுத்ததில் நிறைவேறினாலும், இங்கு மனிதனாகக் கருவில் வளர்ந்தது இறைவனே என்ப தையும், மரியின் கன்னிமை மற்றும் இயேசுவின் தெய்வீகத்தன்மை நமக்கு ஓர் உறுதிப்பாடாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இயேசுவின் பிறப்பைக் குறித்த முன்னறிவிப்பில் 'இது எங்கனம் ஆகும்?' என அன்னை மரி கேள்வி எழுப்பியது சந்தேகத்தின் வெளிப்பாடல்ல, மாறாக, இறைவிருப்பத்தை மேலும் புரிந்துகொள்வதற்கான முயற்சியே என்றும் எடுத்துரைத்தார்.
மரியாவின் 'ஆம்' என்ற பதில் கன்னிமையில் அவரைத் தாயாக்கியது என்ற பாப்பிறை, மரியாவின் கன்னிமை தனித்துவம் வாய்ந்தது எனவும், அது விசுவா சத்தின் சாராம்சம் என்றும் கூறினார். கடவுளில் ஆழமான நம்பிக்கை கொண்ட எவரும், தூய ஆவியின் செயலால் இயேசுவையும் அவரது இறை வாழ்வையும் தம்மில் வரவேற்க முடியும் எனவும், மரியா மாசற்ற கன்னியாக கடவுளை நமக்கு கொண்டுவந்தார் என்றும் கூறிய திருத்தந்தை, இறுதியாக கூடியிருந்த அனைவ ருக்கும் கடவுளின் ஆசீரை வேண்டுவதாகவும் குறிப்பிட்டார்.