Thursday, December 22, 2011

டிசம்பர் 21, 2011

நாம் கடவுளை ஏற்றுக்கொண்டால் அவர் நம் வாழ்வில் பிறந்து இவ்வுலகை மாற்றியமைப்பார் - திருத்தந்தை

   கிறிஸ்மஸ் பெருவிழாக் கொண்டாட்டங்களுக்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில், அப்பெருவிழா குறித்தே இப்புதன் மறை போத கத்தை வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
   கிறிஸ்மஸ் பெருவிழா நெருங்கி வரும் இவ்வேளையில், இறைவனின் பிறப்பை ஆன்மீகப் பலன் தரும் வகையில் கொண்டாட உதவுகி
ன்ற வண்ணம் உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக் கும் என் செபம் நிறைந் நல் வாழ்த்துக்களை வழங்குகிறேன். 'இன்று நமக்கு மீட்பர் பிறந்துள்ளார்' என நள்ளிரவுத் திருப்பலியின் போது நாம் பாடுகின்றோம். 'இன்று' என்பது என்றென்றும் நிலையான நிகழ் காலத்தை காண்பிக்கிறது. ஏனெனில், கிறிஸ்துவின் வருகை எனும் மறையுண்மை, காலத்தைக் கடந்ததாக, வரலாற்றை ஊடுருவுவதாக உள்ளது. 'இன்றும்' என் றென்றும், நம்மிடையே மீட்பளிக்கும் இறை அன்பின் பிரசன்னத்தைக் கண்டு கொள்ள நாம் அழைப்புப் பெறுகிறோம். 
   கிறிஸ்துவின் பிறப்பில், கடவுள் நம்மிடம் வந்து அவரை ஏற்றுக்கொள்ளும்படி நம்மைக் கேட்கிறார். அவ்வாறு ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர் நம் வாழ்வில் பிறந்து நம் வாழ்வையும் இவ்வுலகையும் தன் அன்பின் வல்லமை மூலம் மாற்றியமைக்க முடியும். பாஸ்கா மறையுண்மையின் பின்னணியில் கிறிஸ்துவின் பிறப்பு குறித்து ஆழ்ந்து தியானிக்கும்படி கிறிஸ்துமஸ் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துமஸ் தன்னையும் தாண்டி சுட்டிக்காட்டுவது, சிலுவையிலும் உயிர்ப்பின் மகிழ்விலும் வெற்றியாக பெறப்பட்ட மீட்பையே. கடவுள் நம்மருகே வந்துள்ளார், நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மருகே இருக்கிறார் என்ற உணர்வில் பெறும் மகிழ்வால் இந்த கிறிஸ்துமஸ் பெருவிழா நம்மை நிறைவிப்பதாக.
   இவ்வாறு த
து புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.